Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளாச்சேரி பட்டாபிஷேக ராமர் ... கும்பகோணம் கோயிலில் ராமநவமி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் கும்பகோணம் கோயிலில் ராமநவமி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூண்டுக்குள் அடைபட்ட அழகர்கோவில் பேட்டரி கார்: பக்தர்கள் தவிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கூண்டுக்குள் அடைபட்ட அழகர்கோவில் பேட்டரி கார்: பக்தர்கள் தவிப்பு

பதிவு செய்த நாள்

28 மார்
2017
03:03

அழகர்கோவில்: அழகர்கோவிலுக்கு வரும் வயதான, மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி கார் கூண்டுக்குள் அடைபட்டிருப்பதால், அதன் நோக்கம் பயனற்றதாகி விட்டது. மலை அடிவாரத்தில் உள்ளது சுந்தரராஜபெருமாள் கோயில். அதுபோல் மலை மேல் சோலைமலை முருகன் கோயில் மற்றும் நுாபுர கங்கை தீர்த்தம் உள்ளன. அழகர் மலையின் இயற்கை அழகையும், நுாபுரகங்கையில் தீர்த்தமாடவும், பெருமாள், முருகனை தரிசிக்கவும் தினமும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். சுந்தரராஜபெருமாள் கோயிலுக்கு பஸ் மற்றும் வாகனங்களில் வரும் பக்தர்களின் வாகனங்கள் பஸ் ஸ்டாண்ட், தேர் செல்லும் ரோட்டில் நிறுத்தி அங்கிருந்து அரை கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டும். இதனால் முதியோர், மாற்றுத்திறனாளிகள் நடக்க முடியாமல் மிகவும் சிரமம் அடைகின்றனர். பக்தர்களின் வசதிக்காக கடந்த ஆண்டு துவக்கத்தில் பக்தர் ஒருவர் 6லட்சம் ரூபாய் மதிப்பில் பேட்டரி கார் ஒன்றை உபயமாக வழங்கினார். சோதனை ஓட்டம் நடந்ததோடு சரி. காரை இயக்குவதற்கு கோயில் சார்பில் டிரைவர் அமைக்க வில்லை. காரை இயக்காமல் ஓராண்டாக கூண்டுக்குள் முடங்கி கிடக்கிறது. இதனால் பக்தரின் உபயம் வீணாவதோடு, காரும் வீணாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. டிரைவரை நியமித்து காரை இயக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar