சாயல்குடி, சாயல்குடி அருகே கூராங்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயில் மிகவும் பழமையானது. கடந்த மார்ச் 27., காலை கோட்டை விநாயகர் வழிபாடு செய்யப்பட்டு, மார்ச் 29.,ல் கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, கிராம சங்கல்பம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு ராஜ கோபுர கலசங்கள், விமானங்களுக்கு பாலஸ்தாபன பூஜைகள் கோலாகலமாக நடந்தது. மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. பூஜைகளை டி.எம்.கோட்டை வெங்கடேஷ குருக்கள் செய்திருந்தார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான குலதெய்வ குடிமக்கள், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கூராங்கோட்டை தர்மமுனீஸ்வரர் கோயில் நிர்வாக டிரஸ்டிகள் செய்திருந்தனர்.