ஹேவிளம்பி புத்தாண்டு, ஏப்.14ல் தொடங்குகிறது. இந்த ஆண்டின் ராஜா புதன். மந்திரி சுக்கிரன். குரு கன்னி ராசியிலும், சனி விருச்சிகத்திலும், ராகு சிம்மத்திலும், கேது கும்பத்திலும் உள்ளனர். கன்னி ராசியில் இருக்கும் குரு, செப்.1ல் துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 2018 பிப்.13ல் அதிசாரமாக விருச்சிக ராசிக்கு செல்வார். சனி விருச்சிக ராசியில் இருக்கிறார். டிச.18ல் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார். ஜூலை 26ல் ராகு சிம்மத்தில் இருந்து கடகத்திற்கும், கேது கும்பத்தில் இருந்து மகரத்திற்கும் மாறுகின்றனர். இங்கே கோச்சாரத்தின் அடிப்படையில் பலன்கள் தரப்பட்டுள்ளன. சிலருக்கு சுமாரான பலன் நடக்கும் என்று குறிப்பிட்டாலும், ஜாதகத்தில் நல்ல திசை, புத்தி நடந்தால் நன்மையே நடக்கும். பரிகாரங்களில் இயன்றதை செய்தாலே போதும். கெடுபலன் குறைந்து நன்மை மேலோங்கும்.