சாத்துார் கோயில் பங்குனி பொங்கல் விழா: பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2017 12:04
சாத்துார்:சாத்துார் ஸ்ரீமாரியம்மன், காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். சாத்துார் ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீகாளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா மார்ச் 26 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. எட்டாம் நாளான நேற்று பொங்கல்விழா நடந்தது. காளியம்மன் கோவில் முன் மதியம் 12 :00 மணிக்கு பூக்குழிக்காக அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது. கலந்து கொண்ட பக்தர்கள் விறகு, எண்ணெய், சூடம், மிளகு உட்பட பொருட்களை வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 6:30 மணிக்கு வைப்பாற்றில் இருந்து கரகம் எடுத்து வந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பக்தர்கள் மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு 12:00 மணிக்கு காளியம்மன் கோயில் முன் பக்தர்கள் பூக்குழி இறங்கினர். சாத்துார் நகராட்சி சார்பில் குடிநீர் வசதி செய்யப்பட்டு இருந்தது. தீயணைப்பு துறையினர், போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்தனர்.