மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2017 10:04
சென்னை: சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இக்கோவிலில் பங்குனித் திருவிழா 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குனி பெருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.கபாலீசுவரர் உடனுறை கற்பகாம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நான்கு மாடவீதிகளிலும் பக்தர்கள் கூட்டத்தின் நடுவே தேர் மெல்ல அசைந்தாடி வந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கபாலீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.