திண்டிவனம்: வடசிறுவளூர் ஆஞ்சநேயர் கோவிலில், ஸ்ரீராம நவமி உற்சவம் நடந்தது. திண்டிவனம் அடுத்த வடசிறுவளூர் கிராமத்திலுள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில், ராம நவமியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு நீர்மோர், பானகம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலையில், மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரமும், உற்சவர் ஸ்ரீ சீத்தா ராமர், லட்சுமணர் ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இரவு வாண வேடிக்கையுடன் சுவாமி வீதியுலா நடந்தது.