கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அடுத்த மடவிளாகம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. விழாவையொட்டி, மாலை 5:00 மணிக்கு அர்ச்சுணன் மாடுவிரட்டும் நிகழ்ச்சியும், கோட்டை இடித்தலும் நடந்தது. பின்னர் அரவாண் களப்பலி நடந்தது. குளக்கரையில் ஏராளமான பெண்கள் பொங்கலிட்டனர். மாலை தீமிதி விழா நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர் சுப்பிரமணியன், பாலகிருஷ்ண சிவாச்சாரியார் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.