புதுச்சேரி: அனந்த ரங்கநாத பெருமாள் கோவிலில் நடந்த மகா சம்ப்ரோஷணம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி செயின்ட் தெரேசா வீதியில் ௧௩௫ ஆண்டுகள் பழமையான அரங்க ராமாநுஜர் பஜனை மடத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத அனந்த ரங்கநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலின் மகா சம்ப்ரோஷணம் நேற்று முன்தினம் துவங்கியது.
முதல் நாளில் முதல்கால ஹோமம், இரண்டாம் கால ஹோமம், கோ பூஜை நடந்தது.இரண்டாம் நாளான நேற்று காலை 7.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாடப்பட்டன. தொடர்ந்து 9:௦௦ மணிக்கு மூன்றாம் கால ஹோமம் நடந்தது. 10:௦௦ மணிக்கு யாத்ரா தானம், 10.30 மணிக்கு கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா சம்ப்ரோஷணம் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அரசு செயலர் தேசாய், இந்து சமய அறநிலைத் துறை ஆணையர் தில்லைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி அன்புச்செல்வன் செய்திருந்தார்.