பதிவு செய்த நாள்
10
ஏப்
2017
02:04
தேனி: தேனி அல்லிநகரம் கிராம கமிட்டிக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கடந்த 7ம் தேதி முதல் கும்பிஷேக சிறப்பு பூஜை துவங்கியது. நேற்று காலை 6:00 மணிக்கு நான்காம் யாகபூஜை முடிந்து, காலை 9:00 மணிக்கு மேல் கடம் புறப்பாடு நடந்தது. ரமேஷ் பட்டர் தலைமையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கிராம கமிட்டி பரம்பரை தலைவர் கோவிந்தசாமி, துணை தலைவர் வீரபத்திரன், செயலாளர் தாமோதரன், உதவி செயலாளர், பொருளாளர் ஸ்ரீதரன், முன்னாள் சேர்மன் முனியாண்டி, டி.டி.ஜி., புளூமெட்டல் உரிமையாளர் தண்டபாணி, ஏ.வி.வி., பலசரக்கு கடை உரிமையாளர் தர்மர்லட்சுமி, இன்ஜினியர்கள் நந்தகுமார், முத்துராஜ், திருமால் அழகு டிராவல்ஸ் வெங்கடேஷன், ராதாகிருஷ்ணா பைப்ஸ் ராமநாதன், ராஜா டெக்கரேட்டர்ஸ் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர். மாலையில் திருக்கல்யா உற்சவம் நடந்தது. வரதராஜப் பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா வந்தார். விழா ஏற்பாடுகளை அல்லிநகரம் கிராம கமிட்டியினர் செய்திருந்தனர்.