சிவகாசி முத்து மாரியம்மன் பங்குனி பொங்கல் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2017 11:04
சிவகாசி: சிவகாசி முத்து மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல்விழாவை முன்னிட்டு பட்டாசு ஆலைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளன. சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா நகர் மற்றும் கிராமங்களில் விமரிசையாக கொண்டாடப்படும். வெளியூரில் தங்கி இருக்கும் அச்சக தொழிலாளிகள், வியாபாரிகள் விடுமுறை வாங்கி மாரியம்மன் கோயில் விழாவிற்கு பங்கேற்க வருகை புரிவர். 10 நாட்களும் சிவகாசி நகர் விழா கோலத்தில் காட்சி அளிக்கும். இரவு நேரத்தில் வாணவேடிக்கை, கச்சேரி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். 80 சதவீத ஆலைகள் இதற்காக நகர் மக்கள் புத்தாடை, அணிகலன்கள் வாங்கி அணிந்து மகிழ்வார்கள். சிவகாசியில்பெரும்பான்மையான மக்கள் பட்டாசு தொழிலை சார்ந்து இருப்பவர்கள். அதனால் பங்குனி பொங்கலை முன்னிட்டு அனைத்து பட்டாசு ஆலைகளில் தொழிலாளிகளுக்கு போனஸ் வழங்கப்படும். சில ஆலைகளில் புத்தாடை, இனிப்புகள் வழங்குவதும் உண்டு. இப்பணத்தை வைத்து மக்கள் செழி ப்பாக மாரியம்மனை தரிசித்து உள்ளம் மகிழ்வார்கள். விழாவை முன்னிட்டு 80 சதவீத பட்டாசு ஆலைகள் மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளன. ஒரு சில ஆலைகளில் ஒருவாரம் வரை விடுமுறை விடப்பட்டுள்ளன.