விழுப்புரத்தில், ராமானுஜர் கூடம் திறப்பு விழா நடந்தது. விழுப்புரம் ஸ்ரீவள்ளி ஜூவல்லரி உரிமையாளர் பாண்டுரங்கன், துளசிங்கம் ஆகியோர், குபேர வீதியில் உள்ள தங்களது வீட்டினை. திருவேங்கட ஸ்ரீ ராமானுஜர் கூடம் நடத்த தானமாக வழங்கினர். ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள் தலைமை தாங்கி, ராமானுஜர் கூடத்தை திறந்து வைத்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நாராயணசாமி, ஹோண்டா ஷோரூம் உரிமையாளர் ஜெயக்குமார், மகாலட்சுமி துணிக்கடை உரிமையாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.