திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கருடசேவை உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2017 11:04
திருவல்லிக்கேணி: சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், பிரம்மோற்சவம், ஏப்12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் மூன்றாம் நாளான நேற்று, கருட சேவை சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு, உற்சவர் பார்த்தசாரதி பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் கருட வாகனத்தில் எழுந்தருளி கோபுர வாசல் தரிசனம் கொடுத்தார். பின்பு நான்கு மாட வீதிகளில் உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்18ல் நடைபெறுகிறது.