Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேளாங்கண்ணி தேவாலயத்தில் ஈஸ்டர் ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருநாவுக்கரசர் சதய உற்சவம் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீபெரும்புதூரில் புது பொலிவுடன் தயாரானது பெரிய தேர்
எழுத்தின் அளவு:
ஸ்ரீபெரும்புதூரில் புது பொலிவுடன் தயாரானது பெரிய தேர்

பதிவு செய்த நாள்

17 ஏப்
2017
12:04

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீராமானுஜர், 1,000மாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, பெரிய தேர் சீரமைக்கப்பட்டு, புதுபொலிவுடன் விழாவிற்கு தயாராக உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பின், பெரிய தேர் விழா நடைபெற உள்ளதால், பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ஸ்ரீபெரும்புதுாரில் அவதரித்த ஸ்ரீராமானுஜரின், 1,000மாவது ஆண்டு விழா, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகாரசுவாமி கோவிலில், ஏப்.,22 முதல், மே 1 வரை நடக்கிறது. முன்னதாக, ஆதிகேசவப்பெருமாள் பிரம்மோற்ச விழா கடந்த,12ம் தேதி துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் ஆதிகேசவப்பெருமாள் உற்சவ விழாவின் ஏழாவது நாளும், ஸ்ரீராமானுஜரின் திருஅவதார உற்சவத்தின் ஒன்பதாவது நாளும், திருத்தேர் விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், பாதாள சாக்கடை திட்டத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தால், ஸ்ரீபெரும்புதுாரின் சாலைகள் குண்டும், குழியுமாகமாறியது. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிய தேர் பயன்படுத்தாமல், சிறிய தேர் மட்டுமே, விழாவின் போது பயன்படுத்தப்பட்டது. இதனால், பெரிய தேர் பராமரிப்பு இன்றி பொலிவிழந்து காணப்பட்டது.இந்நிலையில், இந்தாண்டுக்கு பெரிய தேர் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதை யடுத்து, சில மாதங்களுக்கு முன், பெரிய தேர் சீரமைக்கும் பணி துவங்கியது. இதில், தேரின் சக்கரங்கள், சிற்ப வேலைகள், வர்ணம் தீட்டுவது உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்து, விழாவிற்கு தயாராகி, புது பொலிவுடன் தேர் தற்போது காட்சி அளிக்கிறது. மேலும், சாலைகளும் புதுப்பிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டதால், இந்த மாதம் 18 மற்றும் 30ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் பெரிய தேர் திருவிழா, புதுப் பொலிவுடன் நடைபெற உள்ளது. இதை காண, பக்தர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் மூன்று நாள் வருடாந்திர ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணயோத்சவ விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar