பதிவு செய்த நாள்
18
ஏப்
2017
12:04
கோத்தகிரி : கோத்தகிரி பண்ணாரியம்மன் கோவில் விழாவில், அம்மன் ஆற்றங்கரைக்கு அனுப்பும் ஊர்வலத்தில் பக்தர்கள் பங்கேற்றனர்.
கோத்தகிரி கடைவீதி பண்ணாரியம்மன் கோவில் திருவிழா, 2ம் தேதி கொடியேற்றுத்துடன் துவங்கி, நடந்துவருகிறது. கடந்த, 11ம் தேதி, மகா குண்டம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு, அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று முன்தினம், புலிவாகன ஊர்வலத்தில் அம்மன் பவனி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
நேற்று காலை, 9:00 மணிக்கு, அம்மனுக்கு அபிஷேக பூஜையும், 12:00 மணிக்கு, அலங்கார பூஜையும் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, அம்மனை, மேள தாளங்கள் முழங்க, ரோஸ் காட்டேஜ் பகுதியில் உள்ள ஆற்றங்கரைக்கு அனுப்பும் ஊர்வலம் நடந்தது. இதில், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
ஆற்றங்கரையில் நடந்த சிறப்பு பூஜையை தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா நிறைவு நாளான இன்று காலை, 9:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், பகல், 12:00 மணிக்கு, மறுபூஜை, அபிஷேக அலங்கார பூஜை நடக்கிறது.