ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் ஆயிரமாண்டு ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் சார்பில் கிளி, மாலை, வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது. நேற்று மாலை வடபத்ரசயனர் கோயிலிலுள்ள ராமனுஜர் சன்னதியில் கோவிந்தராஜ் பட்டர் சிறப்பு பூஜைகளை செய்தார். பின்னர் ஆண்டாள்கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து ஆண்டாள் கிளி, மாலை, வஸ்திரம் மற்றும் மங்களப்பொருட்களை, ஸ்தானிகம் வெங்கடேஷ் தலைமையில் பட்டர்கள் மாட வீதிகள் சுற்றி வந்து, ஸ்ரீபெரும்புதுார் கொண்டு சென்றனர். விழாவில் மணவாளமாமுனிகள் மட ஜீயர் சுவாமிகள், தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் ராமராஜா, வேதபிரான் சுதர்சனன், மணியம் ஸ்ரீராம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று ஸ்ரீபெரும்புதுாரில் நடக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது ஆண்டாள்கோயில் சீர்கள் ராமானுஜருக்கு சாற்றப்படுகிறது.