குடியின் கொடுமை பற்றி நபிகள் நாயகம் சொல்வதைக் கேளுங்கள். மது அருந்துபவர், பெற்றோரைத் துன்புறுத்துவர் சுவர்க்கம் நுழைய மாட்டார்கள். மது அருந்தும் பழக்கத்தைக் கைவிடாது,மரணிப்பவர் சொர்க்கத்தின் பானத்தை அருந்தமாட்டார். மதுவே ஒரு நோயாக இருக்கும்போது, அது வேறு ஒரு நோய்க்கு எப்படி மருந்தாக அமையும். மது இறக்குவோர், இறக்க வைப்போர், அருந்துபவர், அருந்தச் செய்வோர், மதுவை எடுத்துச் செல்வோர், எடுத்து வரச் செய்பவர், விற்பனை செய்பவர், தனக்காக வாங்குபவர், மற்றவருக்காக வாங்குபவர், மதுத்தொழில் நடத்துவர் ஆகியோரை நான் சபிக்கிறேன். ஒருவன் மது அருந்திய நிலையில் அவனது உயிர் பிரியுமானால், இறைவன் அவனுக்கு கவுத்தா என்னும் நதியில் இருந்து நீரைப் புகட்டுவான். கவுத்தா என்றால் விபச்சாரிகளின் மர்ம ஸ்தானத்தில் இருந்து வெளிப்படும் நீர்.