சோதனை என்பது அனைவருக்கும் பொதுவானது. இதன் மூலம் நல்லவனாக வாழ்வதற்கான பயிற்சி உண்டாகிறது. பயிற்சியை தொடங்கும் போதே, ஒருவரைப் பக்குவப்படுத்த முடியும் அல்லது முடியாது என்பது கடவுளுக்குத் தெரியும். பத்தரை மாற்றுத் தங்கமாகும் என்று தெரிவதால் தானே தங்கத்தை நெருப்பில் இடுகின்றனர். இதுபோல, நல்லவருக்கு சோதனை தந்து கடவுள் பக்குவப் படுத்துகிறார்.