பதிவு செய்த நாள்
09
மே
2017
02:05
உத்தமசோழபுரம்: சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், சித்ரா பவுர்ணமி தேரோட்ட திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
உத்தமசோழபுரம், பெரியநாயகி சமேத கரபுரநாதர் கோவிலின், சித்திரை தேரோட்ட விழாவுக்கான முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி, கடந்த ஏப்ரல், 24ல், நடந்தது. தேரோட்ட விழாவுக்கான கொடியேற்றம் நேற்று நடந்தது. அதிகாலையில், மூலவர் ஆவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து உற்சவர் சிலைகள், தேரில் வைக்கப்படும் கலசம், திருக்குடை ஆகியவற்றை அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. காலை, 9:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள் கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரித்து, வேத மந்திரங்கள் முழங்க தேரோட்ட விழாவுக்கான கொடி ஏற்றப்பட்டது. இன்று காலை,
கரபுரநாதர் பிச்சாண்டார் திருக்கோலத்தில் காட்சியளிப்பார்.
மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. திருத்தேரோட்டம் நாளை மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. 11ல், நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், மாலையில் கொடி இறக்கும்
நிகழ்ச்சி நடக்கிறது. 12 மாலை ஊஞ்சல் உற்சவம், 13ல், மஞ்சள் நீராட்டு உற்சவத்துடன் தேரோட்ட விழா நிறைவு பெறும்.
ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் கலைச்செல்வி மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.