நெட்டப்பாக்கம்: மிட்டா மண்டகப்பட்டு சொக்கநாதர் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்துள்ள மிட்டாமண்டகப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள சொக்கநாதர் கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. அதையொட்டி, மாலை 6:00 மணிக்கு சொக்கநாதர் பெருமாளுக்கும், மீனாட்சி அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. அப்போது சுவாமிகள், அலங்கார கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவில் மிட்டா மண்டகப்பட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.