தானம் என்பது பலனை எதிர்பார்த்துச் செய்வது. தர்மம் என்பது அந்தப் பலனை நம் மனத்தில் நினைக்காமல் செய்வது. உதாரணத்துக்கு ஒரு வேதம் படித்தவரைக் கூப்பிட்டு, பூமி, வஸ்திரம் அல்லது பசு இவற்றைக் கொடுக்கும்போது, சில மந்திரங்களைச் சொல்லிக் கொடுக்கிறோம். இதை நான் கொடுக்கிறேன்; இதனால் எனக்கு இன்ன பலன் கிடைக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறோம். அப்போது தானம் என்பது பலனை எதிர்பார்த்துச் செய்வது. தர்மம் என்பது, சாலையில் பார்க்கிறோம். ஒருவர் வந்து, அம்மா தாயே பசிக்கிறது என்கிறார். அவரிடம் பணம் கொடுக்கும்போது எதையும் எதிர் பார்ப்பதில்லை. அதற்குப் பலன் உண்டு என்றாலும், அதனை நாம் எதிர்பார்க்காமல் கொடுக்கிறோம்! ஸ்வதர்மம் என்றால் சுபாவம் என்று பொருள். உதவி செய்யக்கூடிய மனிதனின் சுபாவம். தானேன போகி பவதி என்பது எந்த எந்தச் சவுக்கியங்களை நாம் அடைய வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த அந்த சவுக்கியங்களைக் கொடுக்கக்கூடிய பொருள்களை தானம் செய்கிறோம் என்று சாஸ்திரங்கள் விதிக்கிறது. தானம் பலனை எதிர்பார்த்துச் செய்வது தாமம் ஸ்வபாவமாக, பகவத் ப்ரீதிகரமாகச் செய்வது!