பதிவு செய்த நாள்
18
மே
2017
11:05
தர்மபுரி: தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சண காசி காலபைரவர் கோவிலில் இன்று (மே, 18) தேய்பிறை அஷ்டமி விழா நடக்கிறது. காலை, 6:00 மணி முதல், காலபைரவருக்கு அஷ்ட பைரவர் யாகம், அஷ்ட லட்சுமி யாகம், தனகார்சன குபேர யாகம் நடக்கிறது. தொடர்ந்து கால பைரவருக்கு ராஜ அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்து, 64 வகையான அபிஷேகம், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள், நான்கு வேத பாராயணம், சிறப்பு உபகார பூஜைகள் மற்றும் மங்கள ஆரத்தி நடக்கிறது. இரவு, 10:00 மணி முதல், 12:00 மணி வரை குருதியாகம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.