Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மஞ்சள் கயிறு மாற்ற நல்ல நாள் சண்டிகேஸ்வரரை வழிபட்டால் தான் சிவனை வழிபட்ட பலன் கிடைக்குமா? சண்டிகேஸ்வரரை வழிபட்டால் தான் சிவனை ...
முதல் பக்கம் » துளிகள்
மறுபிறவி உண்டா?
எழுத்தின் அளவு:
மறுபிறவி உண்டா?

பதிவு செய்த நாள்

20 மே
2017
03:05

ஒரு வெளிநாட்டு அன்பர், மகாபெரியவர் முன் பவ்வியமாக அமர்ந்திருந்தார். பெரியவரின் ஒளிதுலங்கும் திருமுகம், அவரைப் பரவசத்தில் ஆழ்த்தியது. அவருக்கு நெடுங்காலமாக ஓர் ஆன்மிக சந்தேகம். யாரிடம் கேட்டு விளக்கம் பெறுவது என யோசித்துக் கொண்டிருந்தார். பெரியவரைப் பார்த்ததும், இவரே தம் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கக்கூடியவர் என்று தோன்றியது. பெரியவர் அவரிடம், ஏதோ கேட்க விரும்புகிறீர்கள் போலிருக்கிறதே? என்றார். வந்தவர் மனதில் மனிதர்களுக்கு மறுபிறவி உண்டா என்பதில் சந்தேகம். அவரது மதம் மறுபிறவி பற்றிச் சொல்லவில்லை. அந்தந்த பிறவியில் செய்த நல்வினை, தீவினைக்கேற்ப இறப்பிற்கு பிறகு இறைவன் தீர்ப்புத் தருகிறான் என்பது அவர் மதத்தின் விளக்கம். கடவுளைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்லாத புத்தர் கூட, மறுபிறவிக் கருத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார். இந்து மதம் அவரவரின் நல்வினை, தீவினைக்கேற்ப மறுபிறவி உண்டு என்று அறுதியிட்டுக் கூறுகிறது.

உண்மையில் மறுபிறவி உண்டா? ள்வியைக் கேட்டதும், பெரியவர் முகத்தில் ஒரு தெய்வீகப் புன்முறுவல் தோன்றியது. அதிருக்கட்டும். நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டுமே? இன்று மாலைக்குள் காஞ்சிபுரம் மகப்பேறு மருத்துவமனையைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருகிறீர்களா? அங்கு இன்று பிறந்துள்ள குழந்தைகளின் விவரங்களைச் சேகரித்து, எடுத்து வாருங்கள். நாம் மாலையில் பேசுவோம்! பெரியவர் ஆசி வழங்கிவிட்டு மடத்தின் உள்ளே சென்று விட்டார். வந்தவருக்கு ஒன்றும் புரியவில்லை. மறுபிறவி பற்றி கேட்டால் மகப்பேறு மருத்துவமனைக்குப் போ என்கிறாரே? அவர் சொல்லைத் தட்டியதாக இருக்கக் கூடாது. சரி; போவோம்.

அவர் மகப்பேறு மருத்துவமனையைச் சுற்றிப் பார்த்துவிட்டு அன்று பிறந்த குழந்தைகள் பற்றிய விபரங்களைச் சேகரித்துக் கொண்டு மாலையில் மடத்திற்குத் திரும்பினார்.  பெரியவர் அவரிடம், மருத்துவமனையில் என்ன பார்த்தீர்கள்? நிறைய குழந்தைகளைப் பார்த்தேன். அவை ஒன்றுபோல் இருந்தனவா? இல்லையில்லை. பல நிறங்கள். பல ஜாடைகள். வித்தியாசமாகத் தான் இருந்தன. பிறந்த குழந்தைகளில் ஏன் இத்தனை மாறுபாடுகள்? கருணைக் கடலான இறைவன் எல்லோர் மேலும் கருணையுள்ளவன் தானே? அப்படியிருக்க ஏன் ஒவ்வொரு குழந்தையையும் ஒவ்வொரு விதமாகப் படைக்க வேண்டும்? ஒரே பிறவி என்றால் இறைவன் எல்லோரையும் ஒரே மாதிரிதானே படைப்பார்? இந்த வேறுபாடு ஏன் வருகிறது என இந்து மதம் யோசித்தது. இது தான் முற்பிறவியின் பலன் என்கிறது அது. இந்தக் கருத்தால் ஒரு பெரிய நன்மையும் உண்டு. சொல்லிவிட்டு, அந்த அன்பரை தீட்சண்யமாகப் பார்த்த பெரியவர் பேச்சைத் தொடர்ந்தார். மறுபிறவிக் கொள்கை, கர்மா தியரியை ஆதாரமாகக் கொண்டது. நாளை நீ நன்றாக இருக்க வேண்டுமானால், இன்று நீ நல்லவைகளைச் செய்து நல்லவனாக நடக்க வேண்டும் என்கிற உண்மையை, அது சொல்கிறது. இந்தப் பிறவியில் ஒருவனை நல்லவனாக வாழ வைக்கக்கூடிய கருத்து என்பது போற்றத்தக்கதுதானே? சொல்லிவிட்டுக் கலகலவெனச் சிரித்தார் பெரியவர். மறுபிறவி பற்றி இப்படி ஒரு அருமையான விளக்கத்தை நான் கேட்டதில்லை! என் சந்தேகமெல்லாம் தீர்ந்தது! என்று சொல்லி விடைபெற்றார் அந்த அன்பர். - திருப்பூர் கிருஷ்ணன்

 
மேலும் துளிகள் »
temple news
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் சிறப்பு மிக்கதாகும். முருகப்பெருமானுக்குரிய ... மேலும்
 
temple news
விநாயகரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவது சிறப்பு விநாயகரை வழிபட சிறப்பான நாள் சதுர்த்தி தினம். ... மேலும்
 
temple news
சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது மகா பிரதோஷம் தினமாகும். பிரதோஷ வேளையில் சிவனை வழிபட  ... மேலும்
 
temple news
எளிமையாக வாழ்ந்து காட்டியும், நியாய, தர்மத்தை எடுத்துச் சொல்லியும் மக்களை தன்பால் ஈர்த்த துறவி காஞ்சி ... மேலும்
 
temple news
மார்கழி தேய்பிறை ஏகாதசி உத்பன்னா மற்றும் உற்பத்தி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இதுவே உலகில் தோன்றிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar