பெண்கள் திருமாங்கல்யத்தை மஞ்சள் கயிற்றில் அணிந்தால் கணவன், மனைவி இருவருக்கும் நீண்ட ஆயுளும், பெண்களுக்கு சுமங்கலி பாக்கியமும் உண்டாகும். மஞ்சள் கயிறு அழுக்காகி விட்டால் புதிய கயிறை திங்கள், செவ்வாய், வியாழக்கிழமையில் மாற்றுவது நல்லது. அன்று காலை நீராடியதும், சாப்பிடும் முன், சுவாமியை வழிபட்டு கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்ற வேண்டும். மாலை, இரவு நேரத்திலோ, ராகு காலம், எமகண்டத்திலோ மாற்ற கூடாது. சாவி, ஊக்கு, தாயத்தை மாங்கல்யத்துடன் அணியக் கூடாது.