நிறைவேறாத ஆசைகளுடன் மரிக்கும் உயிர், மறு ஜன்மத்தில் அதே ஆசைகளுடன் பிறக்குமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2017 02:05
ஆசையே பிறவிக்கும் காரணம்: துன்பத்துக்கும் காரணம்! ஆசை என்பது ஒரு விதை போல, அது மனத்தில் ஆழமாகப் படிந்து விடுகிறது. அந்த ஆசை நிறைவேறும் வரை அந்த ஜீவனுக்கு பிறவி உண்டு. இந்த ஜன்மாவில் நிறைவேறவில்லை என்றாலோ அல்லது அடுத்த பிறவியில் நிறைவேறவில்லை என்றாலோ, அது அதற்கடுத்த பிறவியையும் அடையும். அதனால்தான், ஆசையறுமின் ஆசையறுமின் ஈசனோடோயாயினும் ஆசையறுமின் என்று திருமூலா சொல்கிறார். எந்த விதத்திலும் யாரிடத்திலும் ஆசை வைக்கக் கூடாது. ஆசை என்பது வேறு; அன்பு என்பது வேறு! இறைவனிடம் நாம் வைக்கும் விஷயம் அன்பு. உலகப் பொருள்களிடத்து நாம் வைக்கும் விஷயம் ஆசை. ஆசை சுயநலத்துடன் கூடியது. அன்பு சுயநலம் அற்றது.