பதிவு செய்த நாள்
24
மே
2017
01:05
ஊத்துக்கோட்டை : கோதண்டராம சுவாமி கோவிலில் நடந்த கருடசேவை நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
எல்லாபுரம் ஒன்றியம், பெருமுடிவாக்கம் கிராமத்தில் உள்ள கோதண்டராம சுவாமி கோவிலில், 10 நாள் பிரம்மோற்சவ விழா, கடந்த, 20ம் தேதி துவங்கியது. முதல் நாள், காலை 9:00 மணிக்கு, துவஜாரோகனம், இரவு, 7:00 மணிக்கு முத்துப்பந்தல், மறுநாள்,
21ம் தேதி, காலை 8:00 மணிக்கு, உற்சவர் ஹம்ச வாகனத்திலும், இரவு 8:00 மணிக்கு, சிம்ம வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நாளான, நேற்று முன்தினம் இரவு, கருடசேவை நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை
தரிசனம் செய்தனர். நேற்று, காலை 8:00 மணிக்கு,
சூரியபிரபையிலும், இரவு, 8:00 மணிக்கு சேஷ வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை, சூரிய பிரபையிலும், இரவு, சேஷ வாகனத்திலும் உற்சவர் அருள்பாலிக்கிறார். வரும், 26ம் தேதி, திருத்தேர் நிகழ்ச்சி நடைபெறும்.