பதிவு செய்த நாள்
24
மே
2017
01:05
திருத்தணி : வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேகம், வரும், 1ம் தேதி நடைபெறுகிறது.
திருத்தணி தாலுகா, ராமாபுரம் ஊராட்சிக்குட்பட்ட ராமலிங்காபுரம் கிராமத்தில் புதிதாக வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இக்கோவிலில், மகா கும்பாபிஷேக விழா, இம்மாதம், 31ம் தேதி காலை, விநாயகர் பூஜையுடன் துவங்குகிறது.
தொடர்ந்து, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை மற்றும் தீபாராதனை நடக்கிறது.வரும் 1ம் தேதி, அதிகாலை 5:30 மணிக்கு யாக பூஜை, அவபிருதயாகம், கலச உத்தாபானம், காலை, 7:30 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு பரிவார சகிதம் மற்றும் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை, 10:00 மணிக்கு மூலவருக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள்
நடக்கின்றன.