பதிவு செய்த நாள்
01
ஜூன்
2017
01:06
வடமதுரை: அய்யலூரில் சக்திவிநாயகர், மகாகாளியம்மன், மகாமுத்துமாரியம்மன், முன்னடிகருப்பணசுவாமி, சீதாராமர், காசிவிஸ்வநாதர், பைரவர், சப்தகன்னிமார் ஆகிய கிராம கோயில்கள் உள்ளன. ஊர் மக்கள் சார்பில் மூன்று நாட்கள் உற்சவ திருவிழா நடந்தது. முத்துநாயக்கன்பட்டியில் இருந்து அம்மன் கரகம் பாலத்து களர்பட்டி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. மாவிளக்கு, அக்னிச்சட்டி எடுத்தல், பாரிவேட்டை ஆடுதல், முளைப்பாரி எடுத்தல் போன்ற வழிபாடுகள் நடந்தன. நிறைவாக மஞ்சள் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தது. ஏற்பாட்டினை அய்யலூர் களர்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, காமராஜ் நகர், சந்தைப்பேட்டை, நாகப்பபிள்ளைகளம், அண்ணாநகர், குறிஞ்சி நகர் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.