பதிவு செய்த நாள்
05
ஜூன்
2017
12:06
திருப்பூர் : கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஸ்ரீவித்யா கணபதி, கருணாம்பிகா உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர், தக்ஷிணாமூர்த்தி, ஹயக்ரீவர், பிரம்மதேவர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கடந்த 2ம் தேதி, மகா கணபதி பூஜை, மகாலட்சுமி பூஜையுடன் கும்பாபிஷேக யாக பூஜைகள் துவங்கியது. நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, பிம்ப சுத்தி பூஜை, ரக்ஷாபந்தனம், ஸ்பர்ஸாஹூதி, நாடிசந்தானம், திரவிய யாக பூஜைகள் நடந்தது. கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சுவாமிகள், கோவை சரவணம்பட்டி ஆதீனம் குமரகுரு அடிகளார், திருப்பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் தலைமையில், கும்பாபிஷேக பூனை நேற்று நடந்தது. கூனம்பட்டி சேக்கிழார் பிரபு சுவாமி தலைமையிலான குழுவினர் யாகசாலை பூஜை, சர்வசாதக பூஜைகளை நடத்தினர். காலை, 7:31 மணி முதல், 8:30 மணிக்குள், தொடர்ந்து, வித்யா கணபதி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விகாஸ் வித்யா கல்வி குழும சேர்மன் ஆண்டவர் ராமசாமி, நிர்வாக அலுவலர் குருசாமி, பொருளாளர் ராதா, செயலாளர் மாதேஸ்வரன், துணை செயலாளர் சிவப்பிரியா, ஆசிரியர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.