பதிவு செய்த நாள்
05
ஜூன்
2017
01:06
வல்லக்கோட்டை: வல்லக்கோட்டை முருகன் கோவில் தேர் திருவிழா, நேற்று நடந்தது. ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வல்லக்கோட்டையில், பிரசித்தி பெற்ற சுப்ரமணியசுவாமி
கோவில் உள்ளது. இக் கோவிலின், எட்டாம் ஆண்டு வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா, 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து, பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின், ஏழாவது நாளான நேற்று, திருத்தேர் விழா நடந்தது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த கிராமமக்கள், வடம் பிடித்து தேரை இழுத்தனர். வழி நெடுக்கிலும் ஆங்காங்கே நீர், மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.