மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நம்மாழ்வார் சாற்றுமறை உற்சவம் நடந்தது. ஆழ்வார்களில் குறிப்பிடத்தக்கவர் நம்மாழ்வார். நேற்று, இவரது அவதார நாளை ஒட்டி, ஸ்தலசயன பெருமாள் கோவிலில், மாலை 4:00 மணிக்கு, திருமஞ்சனம் நடந்தது. திருப்பாவை சேவை சாற்றுமறை நடந்து, சுவாமி அவருக்கு பரிவட்ட மரியாதை அளித்தார். 6:30 மணிக்கு, சுவாமி தேவியருடன், அவர் வீதியுலா சென்றார்.