திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே, முடிகொண்டான் கிராமத்தில் ஆலங்குடி சுவாமிகள் அதிஷ்டானம் அமைந்துள்ளது. இங்கு, நேற்று, 82வது வார்ஷிக ஆராதனை மகோற்சவம் நடைபெற்றது. நேற்று காலை, 6:30 மணி முதல், 9:00 மணி வரை அதிஷ்டானத்தில் பாராயண பூர்த்தி, அதிஷ்டான பூஜை; காலை 10:00 மணிக்கு ஆராதனை; மாலை 4:00 மணிக்கு ப்ரவசனம் பூர்த்தி; 6:00 மணிக்கு சுவாமிகளின் திரு உருவ வீதி உலா; இரவு 7:30 மணிக்கு மங்கள ஹாரத்தி நடைபெற்றது. ஏற்பாடுகளை, ஆலங்குடி சுவாமிகள் ஆராதனை சபா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.