பதிவு செய்த நாள்
09
ஜூன்
2017
10:06
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் வைகாசி விசாக தேர் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் வைகாசி விசாக தேர் திருவிழா, கடந்த, மே, 30ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின், 10ம் நாளான நேற்று திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்வு நடந்தது. மாவட்ட போலீஸ் எஸ்.பி., அருளரசு, டி.ஆர்.ஓ., பழனிசாமி, டி.எஸ்.பி., ராஜூ, கோவில் செயல் அலுவலர் ரத்னவேல் பாண்டியன் ஆகியோர் தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இணைந்து, இந்த திருவிழாவை கொண்டாடுவர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மையப்பனை வழிபட்டனர். பக்தர்களுக்கு பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்கள் அன்னதானம் வழங்கினர்.