ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம், தாராட்சி கிராமத்தில், ஒரு வீட்டில் வைத்து, சாய்பாபா சிலை வழிபாடு நடத்தப்பட்டது. ஒவ்வொரு வியாழக்கிழமையும், சிறப்பு பூஜை நடைபெறும். இந்நிலையில், பொதுமக்கள் பங்களிப்புடன் கிராமத்தில் உள்ள லோகாம்பிகை உடனுறை பரதீஸ்வரர்கோவில் அருகே சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்ய, கிராமத்தில் முடிவுசெய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை, யாக சாலை அமைத்து, சிறப்பு பூஜைகளுடன் சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.