மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2017 10:06
திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பவுர்ணமி வெள்ளி என்பதால் ஏராளமான பக்தர்கள் நண்பகல் பூஜைக்கு குழுமியிருந்தனர். ஆனால் பெயரளவிற்கு கூட போலீசார் இல்லாததால் தரிசனம் செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.
திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று போலீசார் இல்லாததால் பவுர்ணமியை ஒட்டி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பரிதவித்தனர். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தமிழகத்திலேயே பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்று. இங்கு ஞாயிறு, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். கடந்த ஞாயிறு அன்று 17 வருடங்களுக்கு பிறகு அம்மனுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. இதனையொட்டி தினசரி ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த வண்ணம் இருந்தனர். நேற்று பவுர்ணமி வெள்ளி என்பதால் ஏராளமான பக்தர்கள் நண்பகல் பூஜைக்கு குழுமியிருந்தனர். ஆனால் பெயரளவிற்கு கூட போலீசார் இல்லாததால் தரிசனம் செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.
தரிசனம் முடிந்து வெளியேறும் பக்தர்களும் தரிசனம் செய்ய வந்த பக்தர்களும் ஒரே பாதையை பயன்படுத்தியதால் நெரிசல் ஏற்பட்டது. சிலர் நெரிசலில் சிக்கி மயங்கினர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மயக்கம் தெளிய வைத்து அனுப்பினர்.மேலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண் பக்தர்களிடம் பணம், நகை ஆகியவற்றை கும்பல் ஒன்று நுாதன முறையில் திருடிச் சென்றதால் பக்தர்கள் பலரும் அழுது புலம்பியபடியே சென்றனர்.கோயிலை தாண்டி எந்த வாகனமும் செல்ல முடியவில்லை.ஷேர் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள், அரசு டவுன் பஸ்கள் என பலவும் நெரிசலில் சிக்கி கொண்டன. எனவே வரும் காலங்களிலாவது வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் போதிய போலீசார் நியமிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்