செங்கம் வேணுகோபால் பார்த்தசாரதி பெருமாள் கோவில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2017 10:06
திருவண்ணாமலை: செங்கம், வேணுகோபால் பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நடந்த, கருட சேவை தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் 10 நாட்கள் நடக்கும் கருடசேவை விழா, கடந்த, 3ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த, 7ல், கருட சேவை விழா நடந்தது. நேற்று தேரோட்டம் நடந்தது. இதை முன்னிட்டு வேணுகோபால் பார்த்தசாரதி பெருமாள் சுவாமி மற்றும் ருக்மணி, சத்யபாமா அம்மன் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. தொடர்ந்து ரீவேணுகோபால் பார்த்தசாரதி பெருமாள், சமேத ருக்மணி சத்யபாமா சுவாமிகள், கருட வாகனத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேர் வடம் பிடித்து இழுத்து சென்று சுவாமியை வழிபட்டனர்.