பதிவு செய்த நாள்
12
ஜூன்
2017
01:06
கோவிந்தவாடி: மழை வேண்டி, வருண பகவானுக்கு பொங்கல் படையல் இட்டு, ஒப்பாரி போராட்டத்தில், கோவிந்தவாடி பெண்கள் ஈடுபட்டனர். மழை பொய்த்து போனதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவ மழையும் பொய்த்து விடக்கூடாது என்பதற்காக, மழை பெய்ய வே ண்டி, வருணபகவானுக்கு பலர், வெவ்வேறு விதமாக நேர்த்திகடன் செய்கின்றனர். அதன்படி நேற்று, கோவிந்தவாடி கிராமத்தைச்சேர்ந்த பெண்கள் சிலர், பகல், 1:00 மணிக்கு ஏரி நடுவே , வருண பகவானுக்கு பொங்கல் வைத்து, படையல் போட்டு, ஒப்பாரி எனப்படும் கூட்டாக அழும் போராட்டம் நடத்தினர். இந்த வினோத வழிபாட்டில், கருவாட்டு குழம்பை , வருண பகவானுக்கு படையலிட்டனர்.