பதிவு செய்த நாள்
12
ஜூன்
2017
01:06
பொன்னேரி: திருவருட்பிரகாச வள்ளலார் தாயார் சின்னம்மையார் இல்லத்தின், நான்காம் ஆண்டு விழா, அகவல்பாராயணம், சொற்பொழிவுகளுடன் வெகு விமரிசையாக
நடந்தது.
பொன்னேரி அடுத்த, சின்னகாவணம் கிராமம், திருவருட்பிரகாச வள்ளலார் தாயார் சின்னம்மையார் பிறந்த ஊர் ஆகும். சின்னம்மையார் நினைவாக, சின்னகாவணம் கிராமத்தில், 2014ல், சத்திய தரும சாலை , ஞானசபையுடன் நினைவு இல்லம் அமைக்கப்பட்டது. அங்கு தினமும் பசியாற்று வித்தலும், நித்திய ஜோதியும் நடைபெறுகிறது. சின்னம்மையார் இல்லத்தின், நான்காம் ஆண்டு விழா, நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அகவல் பாராயணம், சன்மார்க்க கொடி கட்டுதல், பசியாற்றுவித்தல், ஞானசபை அமைய உதவியவர்களின் பெயர் பலகை திறப்பு, சுத்த சன்மார்க்க சொற்பொழிவு, குழந்தைகளின் அருட்பா கலைநிகழ்ச்சி ஆகியவையும் நடந்தன. விழாவில், சின்னகாவணம், பெரியகாவணம், பொன்னேரி, திருவேங்கிடபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச்சேர்ந்தவர்கள் பங்கேற்று, அங்குள்ள நித்திய ஜோதியை தரிசித்து சென்றனர்.