நாளை குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2017 11:06
காடுபட்டி: குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நாளை (ஜூன் 14) நடக்கிறது. இதை முன்னிட்டு யாகசாலை பூஜை நேற்று துவங்கியது. 17 ஆண்டுகளுக்கு பின் ஐந்து நிலை ராஜகோபுரம் 61அடி உயரத்தில் கட்டப்பட்டு உள்ளது. இன்று காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், இரவு 7:30 மணிக்கு மூன்றாம் கால பூஜையும் நடக்கிறது. நாளை அதிகாலை 4:00 மணிக்கு நான்காம்கால சிறப்பு பூஜை நடக்கிறது. காலை 7:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு, பெருமாள் கருட சேவை புறப்பாடு நடக்கிறது.