திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் தீர்த்தவாரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2017 12:06
புதுச்சேரி: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி விழா, கடந்த 7ம் தேதி நடந்தது. அதைத்தொடர்ந்து, கடந்த 8ம் தேதி விழா நிறைவு நாளில் சண்டிகேஸ்வரர் மற்றும் ஆச்சார்ய உற்சவம் நடந்தது. சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை முடிந்து, நான்கு மாட வீதி உலா நடந்தது. பின்பு, ஆச்சார்ய உற்சவம் துவங்கியது. கோவில் ரட்ஷாபந்தன சிவாச்சார்யரான ராஜா சுவாமி நாதர் சிவாச்சாரியருக்கு கோவில் சார்பில் பரிவட்டம் கட்டப்பட்டது. கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், கோவில் கட்டளை தம்பிரான் சாமிகள், சிவாச்சார்யார்கள் சால்வை அணிவித்து வாழ்த்தினர். மங்கள வாத்தியங்கள் முழங்க, ராஜா சுவாமிநாதர் சிவாச்சார்யார் அவரது இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு, விக்னேஷ்வர பூஜை நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.