பதிவு செய்த நாள்
14
ஜூன்
2017
02:06
திருப்பூர்: பூமலூர் அந்தோணியார் சர்ச்சில், தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. திருப்பூரை அடுத்த பூமலு<õரில், பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் சர்ச் உள்ளது. இதன் தேர்த்திருவிழா, ஆண்டுதோறும் கொடியேற்றத்துடன் துவங்கி, ஆறு நாட்கள் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டுக்கான இத்திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில், நேற்று காலை திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, அவரது தலைமையில் சிறப்பு கூட்டு பாடற்பலி பூஜை நடந்தது. விழாவில், இன்று முதல், காலை மற்றும் மாலையில் சிறப்பு ஆராதனைகள் நடக்கிறது. வரும், 17ம் தேதி, கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில், சிறப்பு கூட்டு பாடற் பலி பூஜை நடக்கிறது. முன்னதாக, அவருக்கு சர்ச் பங்கு மக்கள் சார்பில், வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து, மின் விளக்கு அலங்காரத்தில் அந்தோணியார் தேர் பவனி நடக்கிறது. அதையடுத்து திவ்ய நற்கருணை ஆசீர்வாத நிகழ்ச்சியும்; வரும், 18ம் தேதி காலை, திருப்பலி பூஜை, கருமத்தம்பட்டி வட்டார முதன்மை பங்கு தந்தை ஜெரோம் தலைமையில் கூட்டு பாடற் பலி பூஜை, வேண்டுதல் தேர் பவனியும் நடக்கிறது. இதையடுத்து, தஞ்சை ஜீசஸ் கான்வெண்ட் நிறுவனர், அருள் இருதயம் தலைமையில் கூட்டு பாடற்பலி பூஜை மற்றும் மறையுரை நிகழ்ச்சியும், மாலை தேர்பவனியும் நடக்கிறது.