பதிவு செய்த நாள்
15
ஜூன்
2017
01:06
உடுமலை: உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கற்கோவில் கருவறை பிரதமவரி சித்ரவானம் துவக்க விழா நேற்று, பள்ளபாளையம் லேக் வியூ அவென்யுவில், நடந்தது. உடுமலை பள்ளபாளையம் செங்குளம் அருகே, லேக் வியூ அவென்யுவில், ‘உடுமலை திருப்பதி’ எனப்படும் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. கற்கோவில், கருவறை பிரதமவரி சித்ரவானம் துவக்க விழா நேற்று காலை, 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் நடந்தது. விழாவில், அகோபில மட ஆஸ்தான வித்வான் ராஜகோபாலன், சிறப்பு பூஜைகளை நடத்தி, பணிகளை துவக்கி வைத்தார். உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் சரவணா மில்ஸ் ராமகிருஷ்ணன், ஜி.வி.ஜி., குழுமம், அமர்நாத், வேலுச்சாமி, ஸ்ரீ பாலாஜி யோகா மையம், திருப்பணி குழுவினர் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பங்கேற்றனர்.