பதிவு செய்த நாள்
17
ஜூன்
2017
12:06
மாமல்லபுரம்: மாமல்லபுரம், மல்லிகேஸ்வரர் கோவிலில், ஜூலை 6ல் கும்பாபிஷேகம் நடத்த, கோவில் நிர்வாகம் முடிவெடுத்து, ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. மாமல்லபுரத்தில், ஒரே சிவபெருமான் கோவிலாக, மல்லிகேஸ்வரி உடனுறை மல்லிகேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவில் பழமை ஆனது. எனினும், நீண்ட காலம் வழிபாடு இன்றி சீரழிந்து, முட்புதர் சூழ்ந்து, அவலத்திற்கு உள்ளாகியது. இந்நிலையை கண்டு வருந்திய பக்தர்கள், கோவிலை புனரமைத்து, மீண்டும் வழிபாடு துவக்க விரும்பினர். சுவாமி, அம்பாள், விநாயகர், முருகர் சன்னதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு, 2004ல், கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, 12 ஆண்டுகள் கடந்த நிலை யில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த, திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. ஜூலை 6ல் கும்பாபிஷேகம் நடத்த, கோவில் நிர்வாகம்
முடிவெடுத்து உள்ளது.