பதிவு செய்த நாள்
19
ஜூன்
2017
01:06
லத்துார் : திருமணம் மற்றும் கோவில் திருவிழா காலம் என்பதால், ஒளி, ஒலி அமைப்பாளர்களுக்கு, இந்த சீசனில் கிராக்கி ஏற்பட்டுள்ளது. திருவிழா நடைபெறும் கோவில் மற்றும் அந்த கிராமத்தில் சீரியல் லைட், மைக் செட், டியூப் லைட், குத்துவிளக்கு, வெல்கம் போர்டு, மஞ்சள் மற்றும் வெள்ளை நிற போக்கஸ் லைட் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி, விழாவிற்கு வருவோர்களுக்கு அடையாளம் காட்டுவதில், ஒளி, ஒலி அமைப்பாளர்கள் ஈடுபடுகின்றனர். கிராமங்களில் திருமணம் போன்று, சுப நிகழ்ச்சிகள் நடக்கும் போது, நிகழ்சியை அழகுபடுத்தவும், நிகழ்ச்சி நடக்கும் இடத்தை அடையாளம் காட்ட ஒளி, ஒலி அமைக்கப் படுகிறது. இவர்கள் நிகழ்ச்சியை அலங்காரம் செய்வதோடு, நிகழ்ச்சிக்கு தகுந்தாற்போல, பாடல்களை ஒலிக்க செய்து, நிகழ்ச்சி நடக்கும் இடத்தை களைகட்ட வைக்கின்றனர். மேலும், ஒரு சில திருமண மண்டபங்களில், சவுண்ட் சர்வீசுக்கு ஏற்பாடு செய்கின்றனர்.
இவர்கள் மண்டபத்தை அலங்கரிப்பது, மண்டபத்தை ஒட்டிய சாலையில் டியூப்லைட், குத்து விளக்கு, வெல்கம் போர்டு அமைத்து தருகின்றனர். திருமணம் மற்றும் கோவில் திருவிழா நாட்களில் மட்டுமே இந்த தொழில் சிறப்பாக நடைபெறும். மற்ற நாட்களில் தொழில் இருக்காது. கிராமங்களில் நடைபெறும் பெரிய கோவில் திருவிழா என்றால், 20 ஆயிரம் முதல், 25 ஆயிரம் வரை வாடகை வசூலிக்கிறோம். சிறிய திருவிழா என்றால், 7,000 ரூபாய் வசூலிப்போம். திருமண மண்டபங்களில் அலங்கார லைட்டுகளின்எண்ணிக்கைக்கு ஏற்ப வாடகை வசூலிக்கிறோம். - மா.தங்கராஜ் வெங்கடேசபுரம் ஒளி, ஒலி அமைப்பாளர்