பதிவு செய்த நாள்
20
ஜூன்
2017
11:06
நரசிங்கபுரம் : நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், ஆனி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு, கருட சேவை நடந்தது.
பேரம்பாக்கம் அடுத்த, நரசிங்கபுரத்தில் அமைந்துள்ளது மரகதவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில். இந்த கோவிலில், இந்த ஆண்டு ஆனி பிரம்மோற்சவம் கடந்த, 17ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, உற் சவர் சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் வீதி யுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழா நாட்களில் தினமும், காலை, 10:00 மணிக்கு உற்சவர் திருமஞ்சனமும், மாலை, 6:00 மணிக்கு பக்தி உலாத்தலும், ஆண் டாள் சன்னதி மண்டபத்தில் ஊஞ்சல் சேவையும் நடந்து வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை, நேற்று காலை நடந்தது. மாலை அனுமந் வாகனத்தில் உற்சவர் வீதியுலா நடந்தது. மேலும், வரும் 23ல் தேரோட்டமும், 25ல் தீர்த்தவாரியும் நடைபெறும். பிரம்மோற்சவ திருவிழா, வரும் 27ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் நிறைவு பெறும்.