Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புலிக்குத்தி கல் கோவில் கும்பாபிஷேக ... பொள்ளாச்சி பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் பொள்ளாச்சி பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகு நாச்சியம்மன் கோவில் வரும் 5ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
அழகு நாச்சியம்மன் கோவில் வரும் 5ல் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2017
12:06

திருப்பூர் : கோவில்வழியில் உள்ள, அழகு நாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம், வரும், 5ம் தேதி காலை, நடைபெறுகிறது. திருப்பூர், கோவில் வழியில் உள்ள, நூற்றாண்டு பழமை வாய்ந்த பெரிய அழகு நாச்சியம்மன், பொன்னழகி அம்மன், சின்னம்மன் கோவில், கோவில்வழி காணியாளர் மாடைகுல மக்களால் புனரமைக்கப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம், வரும், 5ம் தேதி நடக்கிறது.வரும், 3ம் தேதி, பெருமனை பிள்ளையார் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம், முளைப்பாலிகை ஊர்வலம் துவங்குகிறது. காவடியாட்டம், பூக்காவடி நடனம்; 4:00 மணிக்கு, வள்ளிக்கும்மி நிகழ்ச்சி; அதை தொடர்ந்து, திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு, மண்ணெடுத்தல், முளையிடுதல், காப்பணிதல் உள்ளிட்டவை நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு, மூல மூர்த்திகள் யாக சாலைக்கு எழுந்தருளல், முதல்கால வேள்வி, பேöராளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் நடக்கிறது.

வரும், 4ம் தேதி காலை, இரண்டாம் கால வேள்வி நிறைவு பெற்றவுடன், விமான கலசம் நிறுவப்படுகிறது. இரவு, கொங்கு பண்பாட்டு மையத்தின், "அகநானூறு பாடல் பெற்ற உள்ளிவிழவு என்ற கொங்கு பெருஞ்சலங்கை ஆட்டம் நடக்கிறது. வரும், 5ம் தேதி, காலை, 6:00க்கு, மூல மூர்த்திகளுக்கு ஆனைந்தாட்டல், காப்பணிவித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. கன்னிமார், அப்பாத்தா, ஒன்பான்கோள், கருப்பண்ணசாமி, விளக்குக்கம்பம், குதிரை, துவாரசக்தி குடநீராட்டு, 6:30 க்கு நடக்கிறது. ஜூலை, 5ம் தேதியன்று காலை, 7:30 மணிக்கு நான்காம் கால வேள்வி, நாடி சந்தனம், திருமுறை விண் ணப்பத்தை தொடர்ந்து, பஞ்ச வாத்தியத்துடன் திருக்குடங்கள் புறப்பாடு நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு, கும்பாபிஷேகம்; 9:45 மணிக்கு, மூலமூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு நடைபெறும். தொடர்ந்து, அருளுரை, பதின்மங்கல காட்சி, அன்னதானம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் மூன்று நாள் வருடாந்திர ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணயோத்சவ விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar