பதிவு செய்த நாள்
27
ஜூன்
2017
02:06
குன்னுார்: குன்னுார் சின்ன வண்டிச்சோலையில் புனித அந்தோணியார் குருசடி தேவாலயத்தின், 113வது திருவிழா கடந்த, 13ம் தேதி சிறப்பு திருப்பலி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலையில் நவநாள், திருப்பலிகள் நடந்தன. முக்கிய திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. காலை, 11.30மணிக்கு பங்கு தந்தை அந்தோணிசாமி, தலைமையில், சிறப்பு திருப்பலி, மதியம், 1.00மணிக்கு அன்பின் உணவு, மாலை, 6.30 மணிக்கு நவநாள், புனிதரின் ஸ்வரூபம் அலங்கார தேர்பவனி நடந்தது. தொடர்ந்து, புனித அந்தோணியார் பஜனை சங்கத்தின் சார்பில் பாடல்கள் பாடப்பட்டன. தோழமை பஜனை சங்கத்தின் பக்தி பாடல்கள், மங்கள பாட்டுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை உதவி பங்கு தந்தையர் பெரியநாயகம், ஜோசப் சந்தோஷ் ஊர் மக்கள் செய்திருந்தனர்.