Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விஸ்வேஸ்வரர் கோவிலில் ... கொங்கணகிரி கந்த பெருமான் கோவிலில் திருப்பணி துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி கொங்கணகிரி கந்த பெருமான் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பச்சை நிற கற்கோவில் திருமால்பூரின் பொக்கிஷம்!: தொல்லியல் துறை தூக்கம்
எழுத்தின் அளவு:
பச்சை நிற கற்கோவில் திருமால்பூரின் பொக்கிஷம்!: தொல்லியல் துறை தூக்கம்

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2017
11:06

திருமால்பூர் : திருமால்பூரின் பச்சை நிற கற்கோவிலில், சீரமைப்பு என்ற பெயரில், புராதன வட்டெழுத்துக்கள் மறைக்கப்பட்டுள்ளன. இதனால், வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது என, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த திருமால்பூர் கிராமத்தில், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில், கோவில் உள்ளது. இக்கோவில், கட்டுமானம் பச்சை நிற கற்களால், கட்டப்பட்டுள்ளது. கட்டுமான கற்களில், வட்டெழுத்துக்களால், சுவர் முழுவதும் பொறிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில், சீரமைப்பு என்ற பெயரில், வட்டெழுத்துக்களை தொல்லியல் துறை மறைத்துள்ளது.

மேலும், கோவில் பாதுகாப்பிற்கு காவலர் நியமிக்கப்படவில்லை. இதனால், கோவில் வளாகத்தை சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. அதில், பகுதிவாசிகள் மாடுகளை கட்டி வருகின்றனர்.இந்த கோவிலை பராமரிக்கும், மத்திய அரசின் தொல்பொருள் துறை, இவற்றை கண்டும், காணாமல் உள்ளது. இந்நிலை நீடித்தால், முன்னோர் சேர்த்து வைத்த பொக்கிஷங்களை இழக்க வேண்டியிருக்கும் என, சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, பொக்கிஷங்களாக இருக்கும் பச்சை நிற கட்டுமானக் கோவிலை பாதுகாக்க, காவலரை நியமிக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

பரவலான வதந்தி!

கோனார் கோவிலில் இருக்கும் வட்டெழுத்துக்களை, முழுமையாக படிக்க வேண்டும். இந்த எழுத்துக்களை படிக்கும் போது, சிரிக்க கூடாது. அப்படி சிரித்தால், படிப்பவரின் உயிரை பலி வாங்கி விடும் என, பரவலாக பேசப்படுகிறது. இதனால், இந்த கோவில் பக்கமாக கிராமவாசிகள் ஒதுங்குவது கூட இல்லை என, தெரிவிக்கின்றனர்.

பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்!

பச்சை நிற கற்களை, பெரும்பாலான கோவில் கட்டுமானங்களில் பயன்படுத்துவதில்லை. தஞ்சை பெரு உடையார் கோவிலில் கூட, தாது மணல் கலந்த கற்கள் தான் என, கூறப்படுகிறது. ஆனால், கோனார் கோவிலில், பச்சை நிற கற்கள் தான், கட்டுமானத்தில் பயன் படுத்தப்பட்டுள்ளன. கோவிலை, சுற்றியுள்ள மேற்புற துாண்களில், யாளி வீரர்களின் சிற்பம் அற்புதமாக உள்ளது. மொத்தத்தில், ஆட்களை வசீகரிக்கும் கோவிலாக கோனார் கோவில் திகழ்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar