பதிவு செய்த நாள்
05
ஜூலை
2017
11:07
திருப்பூர்: திருப்பூர் ராயபுரம், பாண்டுரங்கன்-ருக்மாயி கோவிலில், கருவறைக்குள் பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்யும் ஆஷாட ஏகாதசி விழா, நேற்று நடந்தது. திருப்பூர், ராயபுரம் ராஜவிநாயகர் கோவிலில் உள்ள, ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி சன்னதியில், பக்தர்கள் கருவறைக்குள் சென்று, சுவாமி தரிசனம் செய்யும், ஆஷாட ஏகாதசி விழா நேற்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு, ஏகாதசி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பக்தர்கள் கருவறைக்குள் சென்று, சுவாமி பாதம் தொட்டு வணங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, கரூர் நாகேஸ்வர சர்மா குழு வினரின், ஹரி நாம சங்கீர்த்தனம் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும்; சேக்கிழார் புனித பேரவை குழுவினரின், விஷ்ணு சகஸ்ர பாராயணம், பஜனை மற்றும் கோலாட்டம்; ஸ்ரீ கணேசம்மா குழுவினரின், அபங்க நாம சங்கீர்த்தன பஜனை நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்கள் கருவறைக்குள் சென்று, வழிபடும் ஆஷாட ஏகாதசி விழா, இரவு, 9:00 மணி வரை நடந்தது; ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என நுõற்றுக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்தனர்.