Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரும் 7ல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆனி ... மன்னீஸ்வரர் கோவிலில் திருப்பணி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கதித்தமலை வெற்றி வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2017
12:07

திருப்பூர்: ஊத்துக்குளி அருகே, கதித்தமலை வெற்றி வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று (ஜூலை, 5ல்) கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Default Image
Next News

ஊத்துக்குளியில், பிரசித்தி பெற்ற கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி கோவில் உள்ளது. கதித்தமலைக்கு வந்த அகத்திய முனிவர், தாகத்தால் தவித்த நிலையில், வேலாயுத சுவாமி தனது சக்தி வேலை  ஊன்ற, அதில் இருந்து தண்ணீர் வந்தது. இதனால், ஊற்றுக்குழி என்று பெயர் பெற்றது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இத்தலத்தில், மலை மீது தேரோடும் கோவில் என, பல்வேறு  சிறப்பு பெற்றது. இக்கோவிலில், பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, கும்பாபிஷேக விழா, 28ம் தேதி, கிராமசாந்தி நிகழ்ச்சியுடன் துவங்கியது.

29ம் தேதி, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், தன பூஜை, கோ பூஜை நடைபெற்றது. ஜூலை, 1ல்,  சாந்தி ஹோமம், திசா ஹோமமும், 2ம் தேதி காலை, பஞ்ச வாத்ய கோஷங்களுடன், சிவன் கோவிலில் இருந்து முளைப்பாலிகை மற்றும் கலச தீர்த்த குடங்கள் ஊர்வலம் நடைபெற்றது. அன்று மாலை, 4:30க்கு, கட ஸ்தாபனம், யாக சாலை பிரவேசம், யாத்ர ஹோமம், முதற்கால யாக பூஜை நடைபெற்றது. 3ம் தேதி காலை, இரண்டாம் கால யாக பூஜையும், 4ம் தேதி, நான்காம்கால யாக பூஜை, கோபுர கலச ஸ்தாபனம், பரிவார சுவாமிகளுக்கு யந்திரம், அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இன்று (5ம் தேதி) காலை, 5:30 மணிக்கு, ஆறாம் கால யாக பூஜை;  8:30 மணிக்கு, யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு; காலை, 9:30 மணிக்கு,  விநாயகர், மூலவர், வள்ளி தேவசேனா மற்றும் ராஜகோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar