சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் வருஷாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2017 03:07
திண்டுக்கல்: சின்னாளப்பட்டி, மேட்டுப்பட்டி, அஞ்சலி வரத சனி கர்வபங்க ஆஞ்சநேயர் கோயிலில் வருஷாபிஷேக விழா வரும் 8ம் தேதி அன்று நடைபெறுகிறது. அன்று காலை 8 மணியளவில் நவக்கிரக ஹோமம், யாகபூஜை, சுதர்ஸன ஹோமம், பஞ்ச சூத்த ஹோமம், 1008 சகஷ்ரநாம ஹோமம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 12 மணிக்குள் 500 லிட்டர் பால் அபிஷேகம், மகாபிஷேகம், சப்தவர்ண அபிஷேகம், ஏழுவர்ண அபிஷேகம் 16 வகை அபிஷேகம் நடைபெறும். அன்றயை தினம் ஆஞ்சநேயர் வஜ்ர அங்கி சேவை அலங்காரத்தில் அருள்பாலிப்பார். ஜுலை 9ல் பங்காரு அம்மன் வருஷாபிஷேக விழா நடைபெறும்.தொடர்புக்கு: 9443226861.